தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்டு திட்டங்களை அதிகரித்து வருவதால், மக்கள் BSNL பக்கம் திரும்புகின்றனர். இந்த பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (vi) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் இன்னும் பல இடங்களில் 3ஜி சேவையை வழங்கி வருகிறது.
BSNL நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் சில முக்கிய பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
5G சேவைகளை வழங்க உள்நாட்டு டெலிகாம் நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிறுவனம் 5G சோதனைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த 5ஜி சோதனை இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், BSNL இன் 5G சோதனை டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ்என்எல் விரைவில் 4G மற்றும் 5G சேவைகளை வழங்க இருக்கிறது, இது மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பிஎஸ்என்எல் தனது 5ஜி நெட்வொர்க்கை விரைவுபடுத்த முயற்சிக்கிறது. எனவே பிஎஸ்என்எல் பயனர்கள் குறைந்த கட்டண அழைப்பு சேவை மற்றும் மலிவான அதிவேக நெட்வொர்க்கைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல்லின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் ஜியோ நிறுவனம் புதிய போன், புதிய திட்டங்கள் மற்றும் சில சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. ஆனால் BSNL மலிவு விலையில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, எனவே மக்கள் மேலும் மேலும் நிறுவனத்தில் இணைகின்றனர்.
இதன்படி ஆந்திர மாநிலத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த தகவல் எக்ஸ் (டுவிட்டர்) இல் வெளியானது. மேலும் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பி.எஸ்.என்.எல்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 19 கிராமங்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கியுள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கூடிய விரைவில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றுக்கு போட்டியாக BSNL மேலும் அற்புதமான சலுகைகள் மற்றும் புதிய சேவைகளை வழங்குகிறது.
One Comment