Oppo நிறுவனம் அடுத்த OPPO A3x 5G போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இந்த போன் தற்போது Vunuyuu சான்றிதழில் காணப்படுகிறது. எனவே இந்த போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
OPPO A3x 5G விவரக்குறிப்புகள்:
6.67 இன்ச் HD Plus LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இதன் டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஃபோன் ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது பயன்படுத்த மிகவும் இனிமையானது.
இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் அதிவேக Qualcomm Snapdragon சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது. இருப்பினும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை இந்த போன் பெறும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, Oppo A3X 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் எக்ஸ்பேன்டபுள் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் பொருள் நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது. ஒப்போ ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் ஒயிட், டார்க் நைட் பர்பிள் மற்றும் கிளவுட் ஃபெதர் பிங்க் நிறங்களில் கிடைக்கும்.
Oppo A3X 5G போனில் 32MP முதன்மை கேமரா + 2MP டெப்த் கேமரா டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இதன் உதவியுடன் அற்புதமான படங்களை எடுக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, இந்த Oppo A3X 5G ஸ்மார்ட்போனில் LED ப்ளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
ஒப்போ A3X 5G போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த Oppo A3X 5G ஸ்மார்ட்போன் 5100 mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ A3X 5G ஃபோனில் 5G, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், NFC, GPS, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரூ.12,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், Oppo விரைவில் பல அற்புதமான ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது. ஒப்போ போன்கள் பட்ஜெட் விலையில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு போனும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
2 Comments