Jio சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களை அதிகரித்தது. அதுவும் அத்தியாவசிய OTT சந்தாக்களை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. Netflix சந்தாவை வழங்கும் JIO, அதன் ரூ.1099 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையையும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது நெட்ஃபிக்ஸ் சந்தாவுடன் புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம். அதாவது ஜியோவின் ரூ. 1299 மற்றும் ரூ. 1799 ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே நெட்ஃபிலிக்ஸ் சந்தாவை வழங்குகின்றன. இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
Jio rs 1299 ப்ரீபெய்ட் திட்டம் :
ஒரு நாளைக்கு 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். எனவே இந்த திட்டத்தில் recharge செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஜியோ திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
குறிப்பாக ஜியோ ரூ. 1299 ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு Netflix (மொபைல்) சந்தாவைப் பெறும். இது தவிர, ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டமானது ஜியோ TV, ஜியோ Cinema மற்றும் ஜியோ Cloudக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64kbps ஆக குறைகிறது.
ஜியோ ரூ 1799 ப்ரீபெய்ட் திட்டம் :
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஜியோ திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
மேலும் ஜியோ ரூ. ப்ரீபெய்ட் திட்டத்தில் 1799 ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு Netflix (அடிப்படை) சந்தா கிடைக்கும். இது தவிர, ஜியோ ரூ 1799 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ TV, ஜியோ Cinema மற்றும் ஜியோ Cloud ஆகியவற்றிற்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது.
இதேபோல், Netflix சந்தா இல்லாமல் Amazon Prime வீடியோவைப் பெற விரும்பும் நபர்கள் ஜியோவின் ரூ. 1029 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதாவது அமேசான் prime வீடியோ சந்தா முன்பு குறைந்த விலையில் கிடைத்தது. தற்போது இந்த திட்டத்திற்கான செலவும் அதிகரித்துள்ளது. இப்போது ஜியோ ரூ. 1029 திட்டத்தின் பலன்களைப் பார்ப்போம்.
Jio rs 1029 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். எனவே இந்த திட்டத்தில் Recharge செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
இந்த ஜியோ ரூ. 1029 ப்ரீபெய்ட் திட்ட ரீசார்ஜ் செய்து, பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தாவைப் பெறுவீர்கள். இது தவிர, ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டமானது JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64kbps ஆக குறைகிறது.
One Comment