mobilewhats-hot

realme 12 pro+ 5G, ஃபிளாக்ஷிப் தரமான மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் கண்டன்ட் க்ரியட்டர்களுக்கான ஒரு ஜாக்பாட், சினிமா கேமரா!

83 / 100

Realme தனது புதிய Mid range ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Realme 12 pro 5g Series என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த பிரிவில் முதல் முறையாக, இந்த மொபைல் மூலம் 120x ஜூம் திறன் கொண்ட பெரிஸ்கோப் கேமராவை ரியல்மி அறிமுகப்படுத்தியுள்ளது.

Realme தனது புதிய Mid range ஸ்மார்ட்போன் Realme 12 Pro 5G Series மொபைலை இன்று (29.01.2024) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Realme 11 5G தொடரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வரும் இந்த மொபைல் Snapdragon 7s gen 2 சிப்செட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

Realme 12 Pro 5G சீரிஸ் சிப்செட்:

Realme 12 pro 5G ஆனது Android 14 அடிப்படையிலான realme UI 5.0 OS இல் இயங்குகிறது. இந்த மொபைல் Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் செயல்படும். Realme 12 Pro 5G தொடர் வெளியீட்டு நிகழ்வில் சிறந்த புகைப்படம் மற்றும் செயல்திறனை வழங்குவதற்காக குறிப்பிடப்பட்டது.

இந்த சிப்செட் அதிக விவரங்கள், தெளிவாக மற்றும் வேகமான செயலாக்கத்துடன் கூர்மையான புகைப்படங்களை செயல்படுத்துகிறது. மேலும் இது குறைந்த வெளிச்சத்தில் தெளிவான புகைப்படங்களை எடுக்க AI De Noising (AIDE) தொழில்நுட்பம் மற்றும் Multi Frame Noise Reduction தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மின்னல் வேக அனுபவத்தை வழங்க இந்த சிப்செட்டின் CPU வேகம் 2.4 Ghz வரை உள்ளது.

Realme 12 Pro 5G தொடர் கேமரா:

realme 12 pro+ 5G
realme 12 pro+ 5G, ஃபிளாக்ஷிப் தரமான மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் கண்டன்ட் க்ரியட்டர்களுக்கான ஒரு ஜாக்பாட், சினிமா கேமரா!

Realme 12 pro 5G ஆனது Sony IMX890 OIS 50 MP சென்சார் கொண்ட பிரதான கேமராவைக் கொண்டுள்ளது, இது முதன்மை பிரீமியம் மொபைல்களில் வழங்கப்படுகிறது. மேலும், இது 120X ஜூம் திறனைக் கொண்டுள்ளது, இது சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற பிராண்டுகளின் பிரீமியம் மொபைல்களில் கூட கிடைக்காது. மேலும், Mid Range செக்மென்ட்டில் முதல் முறையாக, Realme 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 MP பெரிஸ்கோப் போர்ட்ரெய்ட் கேமராவை வழங்குகிறது.

மேலும், Realme 12 pro 5G கேமரா 6X ஜூம் Without Loss Quality புகைப்படங்களை எடுக்க முடியும். இதன் பொருள் 6x ஜூம் வரை நீங்கள் தரத்தில் எந்த குறையும் இல்லாமல் சிறந்த தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். இது தவிர, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, Realme 12 Pro 5G கேமரா பல Multi Focus Length Lossless Quality (16mm, 24mm, 71mm மற்றும் 142mm) மற்றும் சினிமாத் தரமான புகைப்படங்களைப் பிடிக்க சினிமாடிக் ஃபில்டர்களை வழங்குகிறது. மேலும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள RAW டொமைன் அல்காரிதம் தரம் குறையாமல் உயர்தர புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. இது புகைப்படங்களை 155% வேகமாக செயலாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Realme 12 pro 5G சீரிஸ் பேட்டரி 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் Curve Vision டிஸ்ப்ளே இடம்பெறும், Realme 12 Pro 5G சீரிஸ் ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மற்றும் செயல்திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிறந்த பேட்டரி ஆயுளையும் வழங்குகிறது. இது ஒரு பெரிய 5000 mAh பேட்டரி மற்றும் 67W SUPERVOOC சார்ஜிங்கை தருகிறது. இதன் மூலம், Realme 12 pro 5G மொபைலை 19 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.

Realme 12 pro 5G இன் மற்ற சிறப்பமசங்கள்:

  1. மொபைலில் இருந்து மடிக்கணினிக்கு Files-ஐ வேகமாகப் பகிர மைக்ரோசாப்ட் உடனான PhoneLink ஐ Realme அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரைவான Files பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது.
  2. ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள எந்தப் பொருளையும் தட்டி தனி லேயராகப் பிரித்து பைல் டாக்கில் சேமித்து பைலை எளிதாக மாற்றலாம்.

Realme 12 pro 5G ஸ்டோரேஜ் Varient மற்றும் விலை

realme 12 pro+ 5G
realme 12 pro+ 5G

Realme இன் புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன் 3 வண்ணங்களில் கிடைக்கிறது: எக்ஸ்ப்ளோர் ரெட் (காதலர் தின சிறப்பு), நேவிகேட்டர் பீஜ் மற்றும் சப்மரைன் ப்ளூ. Pro+ மாடல் 3 சேமிப்பு வகைகளிலும், Pro மாடல் 2 சேமிப்பு வகைகளிலும் கிடைக்கிறது. அவற்றின் விலை விவரங்கள்…

     realme 12 pro+ 5G

  • 8+128 GB – ரூ.29,999
  • 8+256 GB – ரூ.31,999
  • 12+256 GB – ரூ.33,999

    realme 12 pro 5G

  • 8+128 GB – ரூ.25,999
  • 8+256 GB – ரூ.26,999

ஐசிஐசிஐ வாங்குபவர்களுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி மற்றும் 12 மாத நோ-காஸ்ட் EMI வசதியை வழங்குகிறது. இன்று முதல் தொலைபேசியை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். மேலும் இது பிப்ரவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Realme ஸ்டோர் மற்றும் இணையதளமான Flipkart இல் விற்பனைக்கு வரும்.

Realme 12 Pro+ 5GSpecs:

realme 12 pro+ 5G
realme 12 pro+ 5G, ஃபிளாக்ஷிப் தரமான மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் கண்டன்ட் க்ரியட்டர்களுக்கான ஒரு ஜாக்பாட், சினிமா கேமரா!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button